Thursday, March 26, 2009

பா.ம.க வின் புதிய கூட்டணி ....


இன்று சென்னையை அடுத்த வானகரத்தில் பா.ம.க வின் பொதுக்குழு கூடியது. மருத்துவர் இராமதாஸ், கட்சியின் தலைவர் கோ.க.மணி, மத்திய அமைச்சர்கள் அன்புமணி இராமதாஸ், வேலு மற்றும் சட்டமன்ற , நாடளுமன்ற உறுப்பினர்களுடன் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தி.மு.க. வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணியில் இருந்து பிரிந்த பா.ம.க.வை அணிக்குள் கொண்டுவர காங்கிரஸ் பலவழிகளிலும் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்த நிலையில் இன்றைய பொதுக்குழு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
2581 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக 2453 வாக்குகளும், தி.மு.க விற்கு ஆதரவாக 117 வாக்குகளும் பதிவாகியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏறத்தாழ அ.தி.மு.க வுடன் கூட்டணி முடிவாகிவிட்ட நிலையில், கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட உள்ளார்.

4 கருத்துரை(கள்):

Suresh said...

நன் உங்க பதிவ படிச்சேன் அருமை வோட்டும் போட்டாச்சு
என்னோட பதிவும் படிச்சு பிடிச்ச வோட்ட போடுங்க
http://sureshstories.blogspot.com/

Anonymous said...

பொதுக்குழு உருபினர்களுக்கு , அதிமுக விற்கு வாக்களிக்க சொல்லி அனுப்பி பிறகு பொதுக்குழு கூட்டி, வாக்கெடுப்பு நடத்துற மாதிரி நடத்தி, நல்ல நாடகம். பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்ததால் தான் சேருகிறோம் என்று … நல்ல படம் போடுரறையா … வருங்கால கலைஞர்.
ஏற்கனவே பேச்சுவார்த்தை முடிஞ்சிரிசி, பிறகு எதுக்கு மக்கள் முன்னாடி நாடகம். கட்சி நானா தவல , பொதுக்குழு உறுபினர்கள் சொன்னதால் தவுநேன் நு சொல்லத்தான்.

அட இப்பயாவது மந்திரி பதவியை ராஜினாமா செய்யுங்களேன் . அந்த செல்லாத ஓட்டு போட்டது அன்புமணியா இருக்குமோ? யார் வந்தாலும் நாம மந்திரி ஆகலாம் என்ற எண்ணத்தில் போட்டிருப்பார்.
தேர்தல் வரைக்கும் தான் கூட்டணி அப்புறும் காங்கிரஸ் கூட தான். அய்யா சரியான முடிவு.

ஆதி said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்.

ஆதி said...

அனானி அவர்களே, "செய்வதை திருந்தச் செய்" செய்திருக்கிறார் மருத்துவர்