கிரிகெட்டில் ஆரம்பித்த "பெட்டிங்" சூதாட்டம் இப்போது நாடளுமன்ற தேர்தலை ஒட்டி களை கட்ட ஆரம்பித்துவிட்டது . மன்மோகன் சிங் தான் மீண்டும் பிரதமராக வருவார் என்ற "பெட்டிங் " தான் இப்போது அதிக மவுசு பெற்றுள்ளது .
பிரதமராக வரும் வாய்ப்புள்ளவர்கள் என்று நான்கு பேர்களின் பெயர்கள் "பெட்டிங்கில்" பரபரப்பாக அடிபடுகின்றன, இதில் மன்மோகன் சிங்குக்கு தான்அதிக லாபம் தரக்கூடிய வகையில் பெட்டிங் கட்டப்பட்டு வருகிறது.
மன்மோகன் சிங் மீண்டும் பிரதமராக வருவார் என ஒரு ரூபாய் கட்டினால் இரண்டரை ரூபாய் கிடைக்கும். பா.ஜ.க வின் அத்வானிக்கு ஒரு ரூபாய் ஐம்பது பைசா, சரத் பவாருக்கு ஒரு ரூபாய் எண்பது பைசா, மாயாவதிக்கு ஒன்றேகால் ரூபாயும் கிடைக்கும். சர்வதேச அளவில் பெரும் பணக்காரர்களால் விளையாடப்படும் இந்த சூதாட்டத்திற்கு அனுமதி இல்லை. இன்டர்நெட் வளர்ச்சி மிகுந்த இந்த கம்ப்யூட்டர் காலத்தில், இந்த சூதாட்டத்தை தடுக்க முடியவில்லை.
எல்லா பரிவர்த்தனைகளும் இன்டர்நெட் மூலம் நடப்பதால், சர்வதேச அளவில் ஓசைப்படாமல் பல ஆயிரம் கோடி கை மாறுகிறது. கிரிகெட்டில் ஆரம்பித்த இந்த சூதாட்டம் மும்பைக்கலவரம் போன்ற சம்பவங்களை வைத்தும் ஆடப்பட்டது. மும்பையில் இத்தனை நாள் தாக்குதல் நடக்கும், அதிரடிப்படை வெற்றி பெரும் என்று கூட பெட்டிங் கட்டப்பட்டது. இப்போது நாடளுமன்ற தேர்தலை ஒட்டி, அரசியல் பெட்டிங் தலை தூக்கியுள்ளது. அதிக அளவில் மும்பையில்தான் பெட்டிங்கில் பணம் கட்டுகின்றனர்.
இந்த சூதாட்டத்தை நடத்தும் " புக்கிகள் " இன்டர்நெட் வழியாக இந்த பணத்தை பெற்று, தங்களது பெட்டிங் வர்த்தகத்தை நடத்துகின்றனர் . பணபலம் படைத்த இவர்களின் பெட்டிங் வர்த்தகத்தை போலீசாரால் தடுக்க முடியவில்லை , இன்டர்நெட் வழியாக நடப்பதால் தடுப்பது இயலாத காரியமாக உள்ளது . வரும் நாடளுமன்ற தேர்தலுக்குள் பல ஆயிரம் கோடி வர்த்தகம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ஜ.க 120 இடங்களைப் பெறும் என்று பெட்டிங் கட்டினால், ஒரு ரூபாய்க்கு 1.10 கிடைக்கும், அதுபோல காங்கிரஸ் 150 இடம் பெறும் என்று கட்டினால் ரூபாய் 1.20 ம் கிடைக்கும்
பகுஜன் சமாஜ் கட்சி 40 இடங்களை பிடிக்கும் என்றுதான் அதிகம் பேர் பெட்டிங் கட்டியுள்ளனர், இதில் ஒரு ரூபாய்க்கு ஐந்து ரூபாய் லாபம் கிடைக்கும். பெரும் பணக்காரர்கள் பல லட்சம் ரூபாயை , இப்போதே பெட்டிங்கில் கட்டியுள்ளனர்.
எந்த மாநிலத்தில் எந்த கட்சிக்கு அதிகம் சீட் கிடைக்கும், எந்த தொகுதியில் யார் வெற்றி பெறுவர், முக்கிய தலைகள் தேறுமா ? இல்லையா ? என்றெல்லாம் பெட்டிங் கட்டுவது ஆரம்பித்து விட்டது, இதனால் "புக்கிகள்" சுறுசுறுப்பாகி விட்டனர்.
நன்றி தினமலர் .
அழிந்த நந்தவனத்தில் ஆடுகள் மேய்ந்தால் என்ன ?
கழுதை மேய்ந்தால் என்ன ?
0 கருத்துரை(கள்):
Post a Comment