skip to main |
skip to sidebar
15 வது மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை மறுதினம் (13-5-2009) நடக்கவுள்ள நிலையில், இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடைந்தது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 457 தொகுதிகளுக்கு நான்கு கட்டமாக வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 39, பாண்டிச்சேரி 1, உ.பி யில் 14, மேற்குவங்கத்தில் 11, பஞ்சாபில் 9, இமாச்சல பிரதேசத்தில் 4, உத்தரகண்டில் 5, ஜம்மு காஷ்மீரில் 2, சண்டிகரில் 1 என மீதமுள்ள 86 தொகுதிகளுக்கு கடைசிக்கட்டமாக நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடளுமன்ற தொகுதிகளுக்கும் தலைமை தேர்தல் ஆணையர் நரேஷ்குப்தா வின் புண்ணியத்தால் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. கடந்த ஏப்ரல் 17 ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மொத்தம் 1308 பேர் மனுத்தாக்கல் செய்தனர், இதில் 337 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட 107 பேர் மனுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 824 வேட்பாளர்களும், புதுவையில் 28 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். அதிகபட்சமாக தென்சென்னை தொகுதியில் 44 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினம்(தனி) தொகுதியில் 7 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
தி.மு.க.கூட்டணியில் காங்கிரஸ், வி.சி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளும், அ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., இடது சாரிகளுடனும், பா.ஜ.க. கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, ஐக்கிய ஜனதா தளமும் இணைந்து போட்டியிடுகின்றன.தே.மு.தி.க., பகுஜன் சமாஜ், கொங்குநாடு முன்னேற்ற பேரவை போன்ற கட்சிகள் தனித்தும், புதிய தமிழகமும் மனிதநேய மக்கள் கட்சியும் இணைந்தும் களம் காண்கிறது.
அனைத்து நாடளுமன்ற தொகுதியிலும் தேர்தல் நடத்துவதற்குரிய இறுதிக் கட்டப்பணிகள் நடந்து வருகிறது. தேர்தல் அமைதியாக நடத்தத் தேவையான அணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, சுமார் ஒரு லட்சம் காவலர்களுடன் 97 கம்பெனி துணை ராணுவப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பிரச்சாரம் ஓய்வடைந்த நிலையில் ஒன்றிய நகர கழகத்தினரும், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து தலைவர்களும் கையில் மொய் கவருடன் அப்பாவி தமிழக வாக்காளர்களை வசியப்படுத்த தயாராகிவிட்டனர். மண் கவ்வப்போவது யாரு? மகுடம் சூடப்போவது யாரு? 16 ம் தேதி வரை காத்திருப்போம் .
4 கருத்துரை(கள்):
உங்க bidvertiser ல குத்திட்டேன் தல நேரம் கிடைக்கறப்போ ( வாரம் ஒரு தடவ ) நம்ம தளத்திலயும் வந்து குத்திட்டு போங்க
குத்தலும் குடைச்சலும் நமக்கு சொல்லியா தரனும்? நேற்றே தொடங்கிட்டேன் தல.
என் bidvertiserலேயும் வெளாயாடுங்க தல.. :-)
என்ன நடந்தாலும்.. நாம ஓட்டு மட்டும் போட்டுட்டு இருக்கப் போறது நெசம்..
Post a Comment