இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதலை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தா. பாண்டியன் அறிவித்துள்ளார். இவர் சமீப காலமாக முன்னெடுத்து வரும் போராட்டங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில்,தமிழக தலைவர்கள் தலைமையில் பொது மக்கள் மற்றும் அனைத்து தரப்பினர் ஒத்துழைப்புடன் அனைத்து போராட்டங்களும் வெற்றி பெற்றுள்ளன.
தற்போது அவர் மனித உரிமை அமைப்புகளுடன் கலந்து பேசி அவர்களின் துணையோடு நல்ல வழக்கறிஞரை கொண்டு வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.ஐயா தா. பாண்டியன் அவர்களே நல்ல வழக்கறிஞரை எங்கே தேடுவது என்ற மனக்கலக்கம் தங்களுக்கு சிறிதளவேனும் இருக்குமல்லவா. அவரை நீங்கள் ஏன் தேடி செல்ல வேண்டும். நம் கலைஞர் ஐயா அவர்கள் இலங்கை தமிழர் நல உரிமை அமைப்பு ஒன்றை, தமிழர் தலைவர் வீரமணி , சட்ட அமைச்சர் துரைமுருகன் ,கவிஞர் கனிமொழி, ஸ்பெக்ட்ரம் புகழ் ராசா மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஐ கொண்டு உருவாக்கி அவர்களை பல்வேறு நாடுகளுடன் தொடர்பு கொண்டு போர் நிறுத்தம் செய்ய ஏறப்பாடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்களே. அதில் சட்ட அமைச்சரும் சட்ட வல்லுனர்களும் இருப்பது உங்களுக்கு தெரியவில்லையா , காங்கிரஸின் சட்ட மன்ற உறுப்பினர், ராஜிவ்காந்தியின் நண்பருமான, பிரபாகரனுக்கு ராஜிவ்காந்தியிடம் கைகெடிகாரம் வாங்கி தந்த வழக்கறிஞர் பீட்டர் அல்போன்ஸை மறந்து விட்டீர்களா அல்லது தற்போது தேர்தல் நெருங்குவதால் தமிழர்களின் நினைப்பு வந்து இலங்கை அரசு தாக்குதலை நிறுத்த வேண்டும், விடுதலைபுலிகள் வன்முறையை கைவிட வேண்டும் , இருவரும் இணைந்து பேச்சு வார்த்தை நடத்த முன்வரவேண்டும் என்றெல்லாம் கூறி மெய்சிலிர்க்க வைத்த மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் நளினி சிதம்பரம் அவர்களையும் மறந்துவிட்டீர்களா.
இவர்கலெல்லாம் இருக்கிறார்கள் என்பதை மறந்தது மட்டுமல்லாது, இருபத்தைந்து வருடங்களாக ஈழ தமிழர்களுக்காக போராடிய தமிழ் ஈன தலைவர் (கீ போர்டில் இ விழ மாடேங்குது ) கலைஞரை மறந்தது உங்களுக்கும் அம்நிஷியா இருக்குமோ என்று (சமீபத்தில் உங்கள் மேல் பட்ட காற்று) எண்ணத் தோன்றுகிறது.
2 கருத்துரை(கள்):
திரு. தா.பாண்டியன் அவர்களுக்கு இதனை அனுப்பிவிட்டீர்களா? சிதம்பரம் காசு கொடுத்தால் யாருக்கு வேண்டுமானாலும் வாதாடுவார்.(ஆனால் கேசு செயிக்குமான்னு கேக்கபுடாது). கனிமொழி தற்போது தீவிர அரசியிலில் ஈடுபடுவதால் நோ கமெண்ட்ஸ். வீரமணியை வாதாட சொல்லலாம் அதற்கு விடுதலை மற்றும் உண்மை இதழ்களை அனைத்து தமிழர்களும் சந்தா கட்டவேணும்(படிகிறோமா இல்லையா என்பது வேறு விஷயம்).
ஆனால் கலைஞர் அய்யாவை வாதடசொன்னால் கவிதை சொல்லியே நீதிபதியை தமிழ்படிக்கவைத்த பெருமையை வாலி, வைரமுத்து ஜால்ராக்களை கொண்டு விழா எடுக்கவேண்டும் ,
அதனால் பாவம் பாண்டியன் விட்டுவிடுங்கள் .
கே.ஆர்.பி.செந்தில்
தங்கள் வருகைக்கு நன்றி செந்தில்,
அவரே கார் எரிந்துபோன சோகத்தில் இருக்காரே ...
Post a Comment